⊕ அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி திருப்பூர் மண்ணின் மைந்தர் இரா.குப்புசாமி-பழனியம்மாள் இணையரின் அன்பு மகனாக திருப்பூரில் பிறந்தவர்.
1983ஆம் ஆண்டு இவரது முதல் புதுக்கவிதை நூல் ‘சூரிய மழை’ வெளி வந்தது.அனிதா என்கிற புனைப்பெயரில் கு.கிருஷ்ணமூர்த்தி எழுதிய வலிமையான புதுக்கவிதை நூல் இது என்று ‘குமுதம்’ வார இதழ் நற்சான்று அளித்தது.

 

⊕  எனது படைப்புகளை ஆய்வு செய்து கோவை அரசினர் கலைக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் திருமதி.சந்திராகிருஷ்ணன் நூல் எழுதியுள்ளார்.இந்த நூலை மலேசிய பல்கலைக்கழகமும் இணைந்து வெளியிட்டுள்ளது.

 

⊕ எனது கவிதை நூல்களை ஆய்வு செய்து மகாராஷ்டிரா மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற தலைவரும் ,மும்பை மாநகர தமிழ் எழுத்தாளர் மன்ற தலைவரும் , மும்பை தானே பகுதியில் உள்ள ‘லிட்டில் பிலோவேர் கான்வென்ட் ‘முதல்வருமான திருமதி.அமலா ஸ்டான்லி ‘பூக்களும் தும்பிகளும்’ என்கிற பெயரில் நூல் எழுதி வெளியிட்டுள்ளார்.

 

⊕ கோவை பாரதியார் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர்.சித்ரா அவர்கள் இவரது கவிதை நூல்களை ஆய்வு செய்துள்ளார்.நூல் வெளிவரவுள்ளது.

 

⊕ எனது நூல்களான திருப்பூர் குமரன்,என் மொழி செம்மொழி ஆகிய இரண்டு நூல்களும் கர்நாடக மாநிலத்தில் தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக் பட நூல்களாக உள்ளது.

 

⊕ தமிழகத்தில் பலகல்லூரிகள்,மேல்நிலைப்பள்ளிகள்,ரோட்டரி,அரிமா சங்கங்கள்.தமிழ் சங்கங்கள் உள்ளிட்டு அனைத்து இடங்களிலும் தொடர்ந்து சொற்பொழிவாற்றிவருகிறார்.

 

⊕ தமிழகத்தின் பண்பாடு,மொழி,இனஉரிமை,தமிழர்களின் தலைவர்கள், தமிழர்களின் ஆன்மிகச் சான்றோர்களால் போன்றதலைப்புகளில்தொடர்ந்துசொற்பொழிவாற்றிவருகிறார்.

 

⊕ திருவள்ளுவர்,வள்ளலார் தாயுமானவர்,வேதாத்ரி மகரிஷி ,வ .உ.சிதம்பரனார்,பேரறிஞர் அண்ணா மற்றும் தமிழும் சார்ந்த தலைவர்களையும், சான்றோர்களையும் தமிழர்கக்கிடையே அறிமுகம் செய்வதில் தன வாழ்நாளைச் செலவிட்டு அனைவரையும் தமிழால் இணைத்து வருகிறார்.