⊕ அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி திருப்பூர் மண்ணின் மைந்தர் இரா.குப்புசாமி-பழனியம்மாள் இணையரின் அன்பு மகனாக திருப்பூரில் பிறந்தவர்.1983ஆம் ஆண்டு இவரது முதல் புதுக்கவிதை நூல் ‘சூரிய மழை’ வெளி வந்தது.அனிதா என்கிற புனைப்பெயரில் கு.கிருஷ்ணமூர்த்தி எழுதிய வலிமையான புதுக்கவிதை நூல் இது என்று ‘குமுதம்’ வார இதழ் நற்சான்று அளித்தது.

⊕ எனது படைப்புகளை ஆய்வு செய்து கோவை அரசினர் கலைக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் திருமதி.சந்திராகிருஷ்ணன் நூல் எழுதியுள்ளார்.இந்த நூலை மலேசிய பல்கலைக்கழகமும் இணைந்து வெளியிட்டுள்ளது.

⊕ எனது கவிதை நூல்களை ஆய்வு செய்து மகாராஷ்டிரா மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற தலைவரும் ,மும்பை மாநகர தமிழ் எழுத்தாளர் மன்ற தலைவரும் , மும்பை தானே பகுதியில் உள்ள ‘லிட்டில் பிலோவேர் கான்வென்ட் ‘முதல்வருமான திருமதி.அமலா ஸ்டான்லி ‘பூக்களும் தும்பிகளும்’ என்கிற பெயரில் நூல் எழுதி வெளியிட்டுள்ளார்.

⊕ கோவை பாரதியார் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர்.சித்ரா அவர்கள் இவரது கவிதை நூல்களை ஆய்வு செய்துள்ளார்.நூல் வெளிவரவுள்ளது.

⊕ எனது நூல்களான திருப்பூர் குமரன்,என் மொழி செம்மொழி ஆகிய இரண்டு நூல்களும் கர்நாடக மாநிலத்தில் தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக் பட நூல்களாக உள்ளது.

⊕ தமிழகத்தில் பலகல்லூரிகள்,மேல்நிலைப்பள்ளிகள்,ரோட்டரி,அரிமா சங்கங்கள்.தமிழ் சங்கங்கள் உள்ளிட்டு அனைத்து இடங்களிலும் தொடர்ந்து சொற்பொழிவாற்றிவருகிறார்.

⊕ தமிழகத்தின் பண்பாடு,மொழி,இனஉரிமை,தமிழர்களின் தலைவர்கள், தமிழர்களின் ஆன்மிகச் சான்றோர்களால் போன்றதலைப்புகளில்தொடர்ந்துசொற்பொழிவாற்றிவருகிறார்.

⊕ திருவள்ளுவர்,வள்ளலார் தாயுமானவர்,வேதாத்ரி மகரிஷி ,வ .உ.சிதம்பரனார்,பேரறிஞர் அண்ணா மற்றும் தமிழும் சார்ந்த தலைவர்களையும், சான்றோர்களையும் தமிழர்கக்கிடையே அறிமுகம் செய்வதில் தன வாழ்நாளைச் செலவிட்டு அனைவரையும் தமிழால் இணைத்து வருகிறார்.



பெற்றுள்ள விருதுகள் : 8

1.தமிழ்நாடு அரசின் சிறந்த எழுத்தாளர் விருது
(தமிழர் தந்தை வ.உ.சிதம்பரனார் நூல் சிறந்த நூலக தேர்வு செய்யப்பட்டு மாண்புமிகு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது-2009)

2. வ.உ.சி இலக்கியச் செல்வர் விருது
(வ.உ.சிதம்பரனார் அவர்களின் தவப்புதல்வர் வ.உ.சி.வாலேஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டது-2010)

3.ஒற்றுமை மாமணி விருது
(திரு.தனஞ்செயன் அவர்கள் மூலமாக கர்நாடக தமிழர் பேரவை சார்பில் ஹூப்ளி நகரில் கர்நாடக கல்வி தரை அமைச்சர் மாண்புமிகு பசவராஜ் கொரட்டி அவர்களால் வழங்கப்பட்டது-2011 )

4.தமிழ் மாமணி விருது
(திருப்பூர் முத்தமிழ் சங்கம் வழங்கிய விருது -2011 )

5.நூற்றில் ஒருவர் விருது
(உச்ச நீதியரசர் ராமசுப்ரமணியம் அவர்களால் வழங்கப்பட்த்து-கோவை 2014 )

6.சொல்வேந்தர் விருது
(திருவண்ணாமலை மாவட்ட தமிழ் சங்கம் சார்பாக சேவைச் செம்மல் திரு.பா.இந்திரராஜன் அவர்கள் மூலம் வழங்கப்பட்டது-2014 )

7.சொற்சுடர் விருது
(அவிநாசி அக்னி தமிழ் பேரவை சார்பில் வழங்கப்பட்டது-2014 )

8.திருப்பூர் குமரன் விருது
(தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக திரு.பா கோபி அவர்கள் மூலம் தலைவர் திரு.திருநாவுக்கரசர் அவர்களால் வழங்கப்பட்டது-2018 )

கையடக்க ஆவண வடிவம்